Connect with us

அரசியல்

கௌரவமாகப் பதவி விலகுங்கள்! – மஹிந்தவிடம் விமல் வலியுறுத்து

Published

on

wimal

“2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளும் நடைமுறை என்பது சவாலுக்குரிய விடயமாகும். எனவேதான், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைத்து, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதற்குப் பிரதமர் பதவி விலக வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் நாட்டு மக்கள் ஏற்கும் அரசு அமைய வேண்டும்.

இந்த நோக்கில்தான் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர். அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்படுவதற்குள் எமது அணியில் உள்ள உறுப்பினரை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்தச் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச தனது சகாக்கள் ஊடாக ஆரம்பித்துள்ளார். ராஜபக்சக்களின் இந்தச் சலூன் கதவு விளையாட்டு எடுபடாது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.

எனவே, சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும். அதனைச் செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்” – என்றார்.

Advertisement

#SriLankaNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (01.07.2022)

Medam வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைக்காக செலவுகள் கைமீறிப் போகும். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள்....

CFHFG CFHFG
ஜோதிடம்3 நாட்கள் ago

வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும் சில வாஸ்து குறிப்புக்கள் உங்களுக்காக இதோ!

செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு...

982e3f6be836411866ce6ec04919cfb9 982e3f6be836411866ce6ec04919cfb9
ஜோதிடம்5 நாட்கள் ago

உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இவற்றை மறக்காமல் செய்தாலே போதும்

உங்கள் வீட்டிலும் செல்வ வளம் பெருக ஒரு சில ஆன்மீக வழிகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் கடைபிடித்தாலே போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்....

money plant1 money plant1
ஜோதிடம்2 வாரங்கள் ago

வீட்டில் பண மழை பொழிய மணி பிளான்ட் செடியை இவ்வாறு வையுங்கள்

வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிஷ்டம் செழித்து பண மழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் செடியை இப்படி வையுங்கள். மணிபிளான்ட் உங்களுடைய வீட்டில் பணமழை பொழிய வேண்டும்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (26.05.2022)

Medam வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைக்காக செலவுகள் கைமீறிப் போகும். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (25.05.2022)

Medam விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உயரதிகாரிகளின் இடையூறு உங்களைச் சிரமப்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலை...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (24.05.2022)

Medam குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனத் துணிவுடன் பெண்கள் காரியம் ஆற்றுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக்...