இலங்கையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இவ்வாறு பெய்யும் மழையானது கரையோரப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதைவேளை, 25 முதல் 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லி மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
#SriLankaNews
Leave a comment