ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் கொழும்பு, மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியை மறித்து பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரிசை யுகத்துக்கு முடிவு வேண்டும் எனக் கோஷம் எழுப்பியும், இந்த அரசை வீடு செல்லுமாறு வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெறுகின்றது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லம் நோக்கி நகராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
 
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment