இலங்கை
யாழில் அதீத ஹெரோயின் போதையால் இளைஞர் சாவு!


ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த இளைஞர், போதைப்பொருளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அடிமையாக இருந்து வந்துள்ளார். அதனால் அவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப் பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றுக் காலையில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டுவிட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சைப் பொத்தியவாறு நிலத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் உயிரிழப்பு அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டமையால் ஏற்பட்டது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்தநிலையில், இரு வாரங்களில் இரு இளைஞர்கள் யாழில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login