யாழ்ப்பாணத்துக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன்படி நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment