இலங்கை
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
கற்கள், போத்தல்களை வீசியெறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - tamilnaadi.com