இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இங்கும் அதிகரித்துள்ளன. இந்நிலைமை நீடிக்காது. மார்ச், ஏப்ரல் ஆகும்போது சாதாரண நிலைக்கு வந்துவிடும்.
நாட்டு மக்கள் தற்போது அரசை விமர்சிக்கின்றனர். அது மக்களுக்குள்ள உரிமை. ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வந்துவிட்டது. 5 அடி உயரம்கூட இல்லை.
அவர் ஜனாதிபதியாகிவிட்டார். அந்த நினைப்பில் மகாநாயக்க தேரர்களையும் சந்திக்க சென்றுவிட்டனர்.
சேதன பசளை மூலமான விவசாயம் என்ற ஜனாதிபதியின் திட்டம் சிறப்பானது. அந்த திட்டத்தை நான் செயற்படுத்துவேன். எதிர்ப்புகளுக்கு அஞ்சி, ஒளியமாட்டேன். ” – என்றார்.
#SrilankaNews
1 Comment