ranil wickremesinghe 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நைஜீரியாவிடம் கடன் வாங்கினால், நாட்டைக் கொடுக்க வேண்டிவரும்: ஐதேக

Share

சர்வதேச தொடர்புகள் உள்ள ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனதெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமாக இருந்தால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும்.

நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும்.

அவ்வாறு இலங்கையில் சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...