இலங்கை
நாட்டை திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தயார் – இராணுவத்தளபதி !


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதிந் நாட்டை திறப்பதற்குரிய சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக துறைகளுக்குப் பொருத்தமான திட்டங்களை குறித்த நிறுவனங்களினால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக சுகாதார பரிந்துரைகள் திட்டமிடப்பட்டுள்ளதெனவும், நாட்டை திறந்தபின்னர் மக்கள் செயற்பட வேண்டிய சுகாதார விதிமுறை தொடர்பில் அனைத்து வழிக்காட்டல்களும் தயா தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.