நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (24) முதல் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது .
இன்றையதினம் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்
இதன்படி, தடுப்பூசி முதலில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான தெளிவூட்டல் மற்றும் எழுத்துமூல அனுமதி குழந்தையின் பாதுகாவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
எவ்வாறாயினும், பாதுகாவலர்களுடைய அனுமதியின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படமாட்டாது. ஏற்கெனவே பல தாய்மார் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை நாள்களிலும் இதேபோன்றே தடுப்பூசி வழங்கப்படும். தம்மிடம் தடுப்பூசி ஏற்ற வரும் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் – எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment