புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் அலுவலகத்திலிருந்து அரியவகை ஆந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
‘Barn Owl’ என அழைக்கப்படும் அரிய வகையான ஆந்தைகளே நேற்றைய தினம் மீட்கப்பட்டன.
கூரையின் மேலிருந்து வீழ்ந்த நிலையில் ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த ஆந்தைகள் நிக்கவரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment