யாழ். பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கருகில் உள்ள ஆலயம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது–24) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.
இளைஞன் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டி காணப்பட்ட இரும்புக் கம்பி நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளதால் படுகாயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment