CCTV 700x375 1
செய்திகள்இலங்கை

அநுராதபுரம் சிறையில் சிசிடிவி கமெராக்கள் இல்லை!!!

Share

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

குறித்த செய்தியில், அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த சிசிரிவி வசதிகள் காணப்படுகின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில், லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்காது.

ஆனாலும் சிறைச்சாலை வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்த்தின் மூலமாக தேவையேற்படின் விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று சிறைச்சாலை தலைமையகம் கூறியுள்ளது எனவும் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 2 7
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய...

1616764671 preschool 2
செய்திகள்இலங்கை

பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!

நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை முதல் (நவம்பர் 28)...

images 8 1
செய்திகள்இலங்கை

கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள்...

images 7 1
இலங்கைசெய்திகள்

பதுளை, கண்டி மண்சரிவுகள்: 24க்கும் மேற்பட்டோர் பலி; 170 வீடுகள் முழுமையாகச் சேதம் – பேரிடர் மையம்!

நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள்...