photo 8 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அண்மைய வன்முறைகளால் நாட்டில் 2 ஆயிரம் கோடி இழப்பு!

Share

இலங்கையில் ஏற்பட்ட வன்முறையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதால், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், காப்புறுதி செய்யப்பட்ட சொத்துகளுக்காக நஷ்ட ஈடு வழங்குவதற்கு ஒரே முறையில் பெருந்தொகையான நிதி தேவைப்படுவதால், காப்புறுதி நிறுவனங்களும் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளன.

கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்னர் 55 அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீ இடப்பட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள கூட்டத்துக்கு வந்த பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து வந்த 40 பஸ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்படும் மல்வான பிரதேசத்திலுள்ள சொகுசு வீடு தீயிடப்பட்டதால் 200 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...