கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2.7 கோடி ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார், வலைப்பாடு கடற்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்தல்காரர்கள் வலைப்பாடு பகுதி கடற்கரையில் கைவிட்டுச் சென்ற 91 கிலோ கேரள கஞ்சாவையே கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கரையை நோக்கி வந்த இரு படகுகளில் இருந்தே இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Leave a comment