யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் இந்தியா சென்றடைந்துள்ளனர்.
5 குடும்பங்களை சேர்ந்த குறித்த 19 பேரும் படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அண்மைக்காலமாக அகதிகளாக படகு மூலம் தமிழகம் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தொகை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில், பொருளாதார நெருக்கடி காரணமாக படகு மூலம் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment