3 30
இலங்கைசெய்திகள்

எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு

Share

எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரனிற்கு (Vijayakala Maheswaran) 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்தமையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...