basil
இலங்கைசெய்திகள்

இவ்வாண்டு 160,000 கோடி நாட்டுக்கு இழப்பு!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் நிதி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடு சட்டவரைபு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வருவாய் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

நாங்கள் பெரும் சிரத்தையுடன் வெளிநாட்டு உதவிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றுக்கு சலுகைக் கடன் திட்டங்களுக்கு மாத்திரமே பணியாற்றவுள்ளோம்.

அத்துடன் இலங்கையின் அரச செலவுகள் வருவாயை விட அதிகரித்துள்ளதால் இதற்கு கொரோனாத் தொற்று முற்றிலும் காரணமாக அமையாது.

எனவே நெருக்கடி நிலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இல்லை. நிதி நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...