IMG 20220322 WA0041
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கிலிருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர்.

நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர் இன்று காலையும், இன்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேர் மாலையும் சென்றடைந்துள்ளனர்.

முதல் 6 பேரும் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

ஏனைய 10 பேரும் இராமேஸ்வரம் – அரிச்சல் முனையிலுள்ள நான்காம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்ற 16 பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....