பருவப்பெயற்சி மழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வர குமார் தெரிவித்துள்ளார்
துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற பருவப்பெயற்சி மழை காரணமாக நேரிடும் இடர்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 35 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் , மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படும் நிலையில் மக்களை பாதுகாப்பாக கொண்டுவந்து தங்க வைக்கின்ற அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment