ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!!
அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது என இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் திறக்கப்படாவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்திக்கும்.
அத்துடன் நாட்டில் உள்ள 45 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாவர். அவர்களது வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment