குருணாகலை வஹெர பகுதியில் வீதி அருகே காணப்பட்ட கால்வாயில் விழுந்து 14 வயது மாணவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர் மழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் குருணாகலை, வஹெர பகுதியில் வீதியோரம் காணப்படும் கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. சிறிய கால்வாயாக இருந்தாலும் வீதி மட்டத்துக்கு நீர் சென்றுள்ளது.
பாடசாலை விட்டு அவ்வீதியூடாக நடந்து சென்ற மாணவன், வாகனமொன்று வந்தவேளை, வீதியோரம் ஒதுங்கியபோதே கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை தேடும் பணி இடம்பெற்றது. எனினும், அவர் பலியானார்.
முறையற்ற விதத்தில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews