“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு பதவி விலகுவதற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் பதவி விலகாவிட்டால் அவர்களை நாம் பதவியில் இருந்து அகற்றுவோம்.
அதாவது இந்த வாரத்துக்குள் அரசு பதவி விலகாவிட்டால் அடுத்த வாரம் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
இந்தப் பிரேரணைக்கு நான் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment