நாட்டில் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த மின்வெட்டு அமுலாக்க வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக, தற்பொழுது மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஓக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியுமெனவும், இதனால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலப்பகுதி 12 ,மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாமென ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment