வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!!
நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த தொழில்களில் ஈடுபடுவோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை. வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோதும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் எவ்வித இடையூறுமிருக்காது. தொடர்ச்சியாக தடுப்புடி வழங்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Leave a comment