வாரத்தில் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், ஆகியோர் யாழ் நகரில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது, வாரத்தில் இரண்டு தடவைகள் கொழும்பிலிருந்து ஆத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும், அவை போதியளவாக இல்லை என்று வர்த்தக அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர், வாரத்தில் மூன்று தடவைகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அத்தியாவசியப் பொருடகள் விநியோகத்தினை மேலும் மேம்படுத்தல் மற்றும் ‘ஏற்றுமதிக் கிராமம்’ எனும் திட்டத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#SriLankaNews