” வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். மக்கள் தற்போது இயல்பு நிலையை நோக்கி நகர்கின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
” எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசை என்பனவே பெரும் பிரச்சினையாக இருந்தன. வரிசைகள் பற்றி சர்வதேச மட்டத்திலும் பேசப்பட்டது. அந்த வரிசை யுகம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 100 சதவீதம் அல்லாவிட்டாலும், மக்களுக்கு நெருக்கடி இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
நெருக்கடியில் இருந்து நாம் தப்பியோடவில்லை. சவால்களுக்கு மத்தியிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment