ரஷ்ய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தையின் பிரதிபலிப்பாக, Aeroflot Airlines எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் தனது சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
எனினும் இலங்கைக்கு வருகைதரும் விமானங்களுக்கு தடையின்றி விமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருளை பெற முடியாமல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வேறு இடத்துக்கு செல்ல வேண்டி ஏற்பட்டால், அதற்கான செலவை இலங்கை அரசாங்கமே செலுத்த வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
#srilankanews