ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!!
ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் இடம்பெறாது என்றும், ரயிலுக்காக காத்திருக்க வேண்டாம் எனவும் ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாடும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்தச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலைமையால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அந்தச் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
Leave a comment