uni
இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்.

Share

பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி பல்கலை முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்”, “குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே … “, கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம்”, தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன் ? ” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...