யாழில் நால்வர் இன்று கொவிட் தொற்றால் சாவு!!
யாழ்ப்பாணத்தில் இன்று (16) திங்கட்கிழமை நால்வர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 65 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, இமையாணனில் திடீரென மயங்கி வீழ்ந்த 45 வயது ஆண் ஒருவர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
Leave a comment