யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

Elephant Tusks 1

 

சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைதானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version