ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 நிலையங்களில் இடம்பெற்றுள்ளதுடன், பரீட்சைக்கு அமரத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 294,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

