ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

arested 1

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 44 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் மற்றும் அவரது மனைவியை ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கான ‘இடத்தை’ அமைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version