மேல்மாகாணத்தில் டெங்கு வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 1,492 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இதுவரை மொத்தம் 15,196 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் சமரவீர விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியால் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறும் தொற்றுநோய் பிரிவின் தலைவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment