இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

Share
முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
Share

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு – மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கவை. சீனாவின் வுகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 விநாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால், உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒட்சிசன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...