இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 குறைவடைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், உள்நாட்டு தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

