கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் காலங்களில் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

