நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழ்நதனர்.
அவ்வாறு உயிரிழந்த, சிறை அதிகாரிகளான எஸ். எச். எஸ். சந்திரவன்ச, வார்டன்கள் எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்கா, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்கா, டி. டட்லி, புஷ்ப குமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்கள் இன்றைய தினம் காலை இறுதி அஞ்சலிக்காக வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன .
குறித்த அதிகாரிகளின் உடலங்களிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும், இந்த மோதலில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

