மாநாட்டில் பங்கேற்குமா எதிர்க்கட்சி?

sajith

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதா அல்லது அதனை புறக்கணிப்பதா என்பது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது பெரும்பான்மையான உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் யோசனை ஏற்கப்பட்டு, இறுதியான முடிவு எடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதினம் சர்வக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கப்போவதில்லை என ஜேவிபி அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version