மன்னாரில் 356 பேருக்கு தொற்று உறுதி!
மன்னாரில் கடந்த 20 நாள்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னாரில் நேற்று மாலை, மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த மாதம் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 356 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 397 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளர் – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment