போதுமான எரிபொருள் கையிருப்பில் – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு
யாழ். மாவட்டத்தில் நுகர்வுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
இவ்வாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாள்களாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், யாழ். மாவட்ட மக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனினும், பெற்ரோலியாக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையின்படி யாழ் மாவட்டத்துக்குத் தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளது.
எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனது தெரிவித்துள்ளார்.
Leave a comment