5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

Share

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்யாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்த அநீதி இடம்பெற்றுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முற்பகல் 11.15 மணிக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், தமது பிள்ளைகளுக்கு முற்பகல் 11.30 மணிக்கே வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணிக்கு மீண்டும் சேகரிக்கப்பட்டதால், தமது பிள்ளைகளுக்குப் பரீட்சைக்கான குறிப்பிட்ட நேரத்தில் அரை மணி நேரத்திற்கு அருகாமையிலான நேரம் பறிபோனதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தமது பிள்ளைகளுக்குக் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் பெற்றோர்கள், இது தொடர்பில் தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடிய போதிலும், அதில் எவ்வித தீர்வும் கிடைக்காததால் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...