பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்ற சந்தேகநபர்களுக்கு தொற்று!!
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு கொவிட் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மோதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களில் இருவர் சுகவீனமுற்றதை அடுத்து பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a comment