dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

Share

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேடுதலின் பின்னர் இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதுடன்,
பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...