தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவு கோரி வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி முல்லைத்தீவு நீதிமன்றம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி மற்றும் 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று பொலிஸ் தடையுத்தரவை வழங்க சென்ற போது,
உயிரிழந்தவரின் மகன் ‘‘அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் சமர்ப்பியுங்கள்’’ பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பொலிஸார் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி:
திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!
https://tamilnaadi.com/news/local/2021/09/25/ravikaran-banned-for-remembering-dileepan/
1 Comment