ester attac 2
இலங்கை

நீதிபதிகளுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு – வெளியாகியுள்ள முக்கிய பாதுகாப்பு.

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் முதல் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வழக்கனது, நாளாந்தம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட இந்த விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருவதோடு, சில சாட்சிகள் இரவு வேளைகளிலும் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுவதே இம்முறையீட்டு வழக்கின் சிறப்பம்சமாகும்.

குறித்த வழக்கு விசாரணை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பு பட்டதாகும்.

அத்துடன், முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உட்பட 24 முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பல தீர்க்கமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...