பஸில் ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகாவாக கருதப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று அதிரடியாக இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் செயற்பாடுகளை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவந்த நிமல் லான்சாவை பஸில் தரப்பு ஓரங்கட்டியது. அதுமட்டுமல்ல இராஜாங்க அமைச்சு பதவியை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் அடிக்கடி முரண்பட வேண்டிய நிலைமை லான்சாவுக்கு ஏற்பட்டது.
இதனால் அமைச்சுக்கு செல்வதை சுமார் ஒரு மாத காலமாக லான்சா தவிர்த்து வந்தார். இதற்கிடையில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரால் நிமல் லான்சாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நிமல் லான்சா பதவி துறந்துள்ளார் .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பிலும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment