Sri Lanka Landslide Deaths
இலங்கை

நாவலப்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Share

நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இப்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை நிலவரம் தொடர்பாக, தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையினால் கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...

exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...