நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
எனவே, தற்போதைய கொரோனா நிலைமையில் நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.
பொதுமுடக்கம் அல்லது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும், மேல்மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தவும் அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
Leave a comment